அடக்கடவுளே!…. ரஷ்யாவுக்கு இந்த நிலைமையா?…. திணறும் மக்கள்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாத காலமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்து வருகின்றன. இதனால் ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு உலக சந்தையில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. ரஷ்ய நாட்டின் சராசரி மாத வருமானமான 540 பவுண்ட்கள் என்பது இங்கிலாந்து நாட்டின் கால்பகுதி மதிப்பு ஆகும். ஜனவரி மாதத்தில் தொலைக்காட்சி பெட்டிகள் 150 பவுண்டுகளுக்கு விற்பனையாகி வந்தது.

ஆனால் தற்போது 350 பவுண்டுகளுக்கு விற்கப்படுகிறது. அதேபோல் சர்க்கரையின் விலை 30 சதவீதம், காபித்தூள் விலை 70 சதவீதம் வரையும் உயர்ந்துள்ளது. மேலும் பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை உபகரணங்களின் விலை 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் வலி நீக்கிகள், இன்சுலின் உள்ளிட்ட 80 சதவீத மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ரஷ்யா இந்த ஆண்டு பொருளாதாரத்தில் 24 சதவீதம் வரை சரிவை சந்திக்கக்கூடும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.