உலக அளவில் பல முன்னணி தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. குறிப்பாக மெட்டா, அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அந்த வகையில் சேர் சாட் நிறுவனமும் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாக நேற்று தகவல்கள் வெளிவந்தது. அந்த வகையில் தற்போது நியூயார்க்கில் உள்ள கோல்ட்மேன் சாக்ஸ் என்ற நிறுவனமும் தற்போது 3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிறுவனம் காலை 7.30 மணிக்கு சிஇஓ-வுடன் அவசர ஆலோசனை என்று ஊழியர்களை நிறுவனத்திற்கு வரவழைத்துள்ளது. ஆனால் அங்கு சென்ற பிறகு 3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக திடீரென நிறுவனம் அறிவித்தது. எங்களுக்கு வேறு வழி இல்லை. எங்களை மன்னித்து விடுங்கள். உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் என்ற அந்த நிறுவனம் ஊழியர்களிடம் கூறியுள்ளது. மேலும் ஒரே நாளில் 3000 ஊழியர்களை நேரில் வரவழைத்து பணிநீக்க நடவடிக்கை எடுத்தது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.