ஐபிஎல் 2024 30-வது லீக் ஆட்டம் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்ற நிலையில் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்வது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 287 ரன்களை குவித்தது. இதன் மூலம் ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற தங்களுடைய சாதனையை தானே முறியடித்து மீண்டும் ஹைதராபாத் அணி புதிய சாதனை படைத்தது.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 262 ரன்கள் எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்த போட்டியில் ஆர்சிபி பவுலர்கள் சரியான முறையில் விளையாடவில்லை. அதோடு மோசமான ஒரு சாதனையையும் படைத்துள்ளனர். அதாவது ஒரு இன்னிங்ஸில் 4 பவுலர்கள் 50 ரன்களுக்கம்  மேல் விட்டு கொடுத்து மோசமான சாதனை படைத்தது இதுவே முதல்முறை. அதன்படி வைசாக் விஜயகுமார் 63 ரன்களும், லாக்கி பெர்குஷன் 52 ரன்களும், யாஷ் தயாள் 51 ரன்களும், ரீஸ் டாப்லி 68 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.