அடக்கடவுளே!!…. பணிகளை ராஜினாமா செய்யும் விமானிகள்…. இலங்கை அரசுக்கு உருவானது புதிய தலைவலி….!!!!!

இலங்கையில் விமானிகள் தங்களது பணியை ராஜினாமா செய்து வருவது அரசுக்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது.

இலங்கையில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் வேலையை  இழந்துள்ளனர். மேலும் வேலையில் இருப்பவர்களுக்கும் குறைவான ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்சில் பணியாற்றி வரும்  விமானிகளுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் குறைந்த ஊதியம், வருமான வரி உயர்வு ,டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பிரச்சனைகளால் விமானிகள் தங்களது பணியை  ராஜினாமா செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா காலகட்டத்திற்கு முன்பு 319 விமானிகள் பணியில்  இருந்தனர். ஆனால் தற்போது 235 விமானிகள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதுகுறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி  கூறியதாவது. இலங்கையில் சுற்றுலாத்துறை படிப்படியாக சீரடைந்து வருகிறது. ஆனால் விமானிகள் இப்போது தங்களது வேலைகளை ராஜினாமா செய்து வருவது மிகவும் கவலையாக உள்ளது. இது அரசுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.