“அடக்கடவுளே!”…. நேருக்கு நேர் மோதிய பேருந்து…. அலறிய பயணிகள்…. பதற வைக்கும் வீடியோ காட்சி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா நோக்கி திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு வாகனம் ஒன்று கொல்லம் மாவட்டத்தில் உள்ள சக்திக்குளங்கரை பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து ஒன்று காரை முந்த முயற்சி செய்துள்ளது. இந்த நிலையில் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது தனியார் பேருந்து பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பின்னோக்கி சென்ற சரக்கு வாகனம் அங்கு வந்து கொண்டிருந்த இரண்டு பைக்குகள் மீது வேகமாக இடித்தது. இந்த பயங்கர விபத்தில் சரக்கு வாகனத்தின் முன்பகுதி அடையாளம் தெரியாமல் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல் தனியார் பேருந்தில் பயணித்த பயணிகள் 19 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கொல்லம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவத்தின் போது பைக்கில் இருந்து கீழே விழுந்த நபர்கள் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *