தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே இரவிலும், அதிகாலையிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. அதே சமயத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில்  தமிழகத்தில் மார்கழி மாதத்தில்  குளிர் இன்னும் அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜனவரி வெப்பநிலை 20 டிகிரிக்கு கீழ் பதிவாகவில்லை. ஆனால் இந்த ஆண்டு அது 18 டிகிரி வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல வேலூரில் 14 டிகிரி வரை வெப்பம் குறையும் என்று தெரிகிறது. இந்த குளிரை தாங்கும் வகையில் மக்கள் ஆடைகள், போர்வைகளை தயார் செய்து கொள்ளுங்கள்.