விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு குடும்ப தலைவியின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் இதற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தினந்தோறும் புதுவிதமான திருத்தங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் திவ்யா. இவர் சீரியலில் மூத்த மகன் செழியனுக்கு மனைவியாக நடித்து வருகிறார். இதில் இவரின் இயல்பான நடிப்பு அனைவருக்கும் பிடித்து போக இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் திவ்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் கடந்த வாரம் எபிசோட்டில் கர்ப்பமாக இருக்கும் இவர் கீழே வழுக்கி விழும் காட்சி இருந்துள்ளது. ஆனால் அந்த காட்சி எடுக்கும் போது அவருக்கு கையில் அணிந்திருந்த வளையல் உடைந்து குத்தியதில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் முதல் உதவி செய்த நிலையில் அந்த வீடியோவை தற்போது திவ்யா பகிர்ந்துள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

divyaganesh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@divya_ganesh_official)