கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (52), கணவனை இழந்த இவருக்கு குணசீலன் (38) என்ற மகன் இருந்துள்ளார். குடிபோதைக்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு தனது தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கைதான இவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்தது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.