அடக்கடவுளே…. கடலில் மூழ்கிய பிரபல கப்பல் உணவகம்…!!!!!!!!

ஹாங்காங்கின்  அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது ஜம்போ கப்பல் உணவகம். 1976-ம் வருடம் சேவை தொடங்கிய இந்த கப்பல் பார்ப்பதற்கு அரண்மனை போன்ற தோற்றம் கொண்டுள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத் முதல் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் வரை பல பிரபலங்கள் இந்த கப்பல் உணவகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும் நகரின் அடையாளமாக இருந்த இந்த கப்பல் உணவகம் சுற்றுலாப்பயணிகளை பெரிய அளவில் ஈர்த்து வந்தது. ஏராளமான திரைப்படங்களும் இந்த கப்பலில் படம் பிடிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கிடையில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த கப்பல் உணவகத்தில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

ஏராளமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகும் இந்த கப்பல் உணவகத்தை பராமரிக்க அதிக நிதி  செலவழிக்க இல்லாத காரணத்தினால் அதை முழுவதுமாக நிறுத்தி விட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் ஹாங்காங்கை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஜம்போ கப்பல் நிறுவனம் கடலில் மூழ்கியது. இந்த தகவலை அதன் முதன்மை நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கின்றது. மேலும் தென் சீனக் கடலில் உள்ள தீவில் சென்று கொண்டிருந்த போது கப்பல் நீரில் மூழ்கி விட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில் கப்பல் மூழ்க தொடங்கியவுடன் உள்ளே இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் கப்பலின் உள்ளே தண்ணீர் நிறைய தொடங்கியவுடன் கப்பலை மீட்க முயற்சித்தும் மீட்க முடியவில்லை என அந்த நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *