அடக்கடவுளே….! எம்எல்ஏவுக்கு திடீர் மூளை பக்கவாதம்….. ஐசியூவில் அனுமதி….!!!!!

உத்திர பிரதேச மாநிலம் சிரது தொகுதி அப்னா தளம் கட்சி எம்எல்ஏ பல்லவி பட்டேல். இவருக்கு நேற்று இரவு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளை பக்கவாதம் இருப்பதாக தெரிவித்தனர்.

மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்பட்டு மூளை அதன் செயல்திறனை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மூளை பக்கவாதம் அவருக்கு ஏற்பட்டதாக கூறுகின்றனர். இதனால உடல்நிலை மோசமான அவர் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *