அடக்கடவுளே…! ஊரடங்கு நீட்டிப்பா…? மொட்டையடித்து வியாபாரிகள் எதிர்ப்பு…. மிரண்ட பிரபல நாடு….!!

சீனப் புத்தாண்டை முன்னிட்டு தென்கொரியாவில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டை சார்ந்த சுமார் 200-க்கும் மேலான வியாபாரிகள் தலையை மொட்டை அடித்துள்ளார்கள்.

தென்கொரியாவில் கடந்த சில தினங்களாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது.

இவ்வாறு இருக்க சீனப்புத்தாண்டு விரைவில் வரவிருப்பதால் மக்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காக மேலும் 3 வாரங்கள் தென்கொரியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில சுமார் 200-க்கும் மேலான வியாபாரிகள் கொரோனா குறித்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தலையை மொட்டை அடித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *