அடக்கடவுளே…!! இப்படியுமா சாவு வரும்: சளிக்கு “ஆவி” பிடித்த மாணவி மரணம்….அதிர்ச்சி …!!

சளி தொல்லைக்கு ஆவி பிடித்த நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மாணவி கௌசல்யா. இவர் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சளி தொல்லையால் கவுசல்யா அவதிப்பட்டு வந்துள்ளார். எனவே சளிக்கு ஆவி பிடிப்பதற்காக இன்று வெந்நீரில் மருந்தை போட்டு ஆவி பிடித்துக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென்று  எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு அப்படியே தனக்கு முன்பு இருந்த சுடு தண்ணீர் பாத்திரத்தில் தலை கவிழ்ந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply