அடக்கடவுளே… இதை போட்டு சமைச்சதுக்கு இப்படியா..? மாமியார் செய்த காரியம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் மருமகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக மாமியார் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தை அடுத்த நொய்டா பகுதியை சேர்ந்தவர் பனாரஸி தேவி(80). இவரது மகன் கடந்து 2020ஆம் ஆண்டு மேட்ரிமோனி தளம் மூலம் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஹரிஷ்கா எனும் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் பனாரஸி தேவி மருமகள் ஹரிஷ்கா குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதில் தனது மருமகள் தன்னை எப்போதும் துன்புறுத்துவதாகவும், சமையலில் வெங்காயத்தையும், பூண்டையும் போட்டு சமைக்கிறார்.

மேலும்  சமையலறையில் உள்ள பாத்திரங்களை அழுக்ககாக வைத்து இருக்கிறார். வீட்டில் இருந்த 50 கிராம் தங்க நகைகள் மற்றும் 20,000 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை எடுத்து  ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்க்கு முன் மருமகள் ஹரிஷ்கா  மீது கடந்த 2020 ஆம் ஆண்டு புகார் அளித்துள்ள போது நடவடிக்கை எடுக்கவில்லை, எனவும் தற்போது தன்னை வீட்டில் உள்ள அறையில் வைத்து அடைத்துக் கொடுமைப் படுத்த்துவதாகவும்  பனாரஸி தேவி புகாரில் கூறியுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.