அடகடவுளே.. மகளுடன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி…. தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு!!!…….

குலசேகரன்பட்டினத்தில் குடும்ப தகராறு காரணமாக மூன்று பேர் விஷம் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் அருகே சிறுநாடார் குடியிருப்பு என்னும் பகுதி அமைந்துள்ளது. சிறுநாடார் குடியிருப்பு பகுதியில் ரகுபதி (55) – சத்தியவாணி (50) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சந்தியா (27) என்ற மகள் உள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக சென்னையைச் சேர்ந்த ஹரிகர சுதன் என்பவருடன் சந்தியாவிற்கு திருமணம் நடைபெற்றது. இதில்  ஹரிகரசுதன் உடன்குடி அனல் மின் நிலையத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில்  ஹரிகர சுதனுக்கும் சந்தியாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.  சம்பவம் நடைபெற்ற அன்று ஹரிகரசுதன் சென்னைக்கு சென்று விட்டார். இதனையடுத்து சந்தியா பெற்றோரிடம் விவரத்தை கூறியதை தொடர்ந்து மூன்று பெரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. அதன் படி  விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை 3 பாட்டில்கள் வாங்கி வந்து நேற்று முன்தினம் இரவில் மூன்று பேரும் குடித்துள்ளனர்.

மேலும் இது குறித்து சந்தியா நெல்லையில் உள்ள தங்களது உறவினர்களிடம் செல்போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு  அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அதே பகுதியில் உள்ள தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் ரகுபதி வீட்டிற்கு சென்றனர். அவர்கள் அங்கு சென்று மயக்கத்தில் இருந்த ரகுபதி, சத்தியவாணி, சந்தியா மூன்று பேரையும் மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.