பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய்யின் வாரிசு படமும், தல அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் வசூல் சாதனையில் அஜித்தின் துணிவு திரைப்படம் முதல் இடத்திலும், வாரிசு படம் 2வது இடத்திலும் இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரிவிக்கிறது.
அதேபோல் விஜய்யின் வாரிசு மொத்தம் 210 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துவிட்டது. ஆனால் துணிவு படக்குழுவோ, ‘உண்மையான வெற்றி’ என்று மட்டுமே சொல்கிறது. கலெக்ஷன் தொடர்பாக ஏதும் வெளியிடவில்லை. ஆனால் வாரிசு 150 கோடி வசூல் என்று படக்குழு அறிவித்தபோது துணிவு 175 கோடி வசூல் என்று ட்விட்டர் விமர்சகர்கள் பதிவு செய்தனர்.