“அஜித் பட வெற்றி இயக்குனருடன் கூட்டணி வைக்கும் அதிதி”…. வெளியான தகவல்….!!!!!!

பிரபல இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் அதிதி சங்கர் நடிக்க உள்ளார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் பிரம்மாண்ட இயக்குனரின் மகள் அதிதி சங்கர். இவர் தனது முதல் திரைப்படத்திலேயே யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து மதுரவீரன் என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்பொழுது கிராமம் வரை ஹிட்டாகி ட்ரெண்டாகியுள்ளது. மேலும் படத்தில் டான்ஸிலும் அதிதி கலக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தை அடுத்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கின்றார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் விஷ்ணு வரதனின் புதிய திரைப்படத்தில் நடிகை அதிதி சங்கர் இணைந்துள்ளார். அஜித்தின் பில்லா. பில்லா 2, ஆரம்பம் என அடுத்தடுத்து மூன்று வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் அதிதி நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.