“அஜித்தின் துணிவு படத்தில் இணைந்துள்ள பிக் பாஸ் பிரபலம்”… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!!!

கடந்த 2019 ஆம் வருடம் நடிகர் அஜித், எச் வினோத் போனி கபூர் கூட்டணியில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் அதே கூட்டணியில் வலிமை திரைப்படம் வெளியானது வலிமை திரைப்படத்தில் அஜித்தின் லுக் மிக மோசமாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வலிமையை தொடர்ந்து ஏகே 61 படத்தில் மூன்றாவது முறையாக வினோத், போனி கபூர், அஜித் மூவரும் சேர்ந்துள்ளனர். வலிமை படத்தில் அஜித்தின் லுக் மிக மோசமாக விமர்சனம் செய்யப்பட்டது. அவரின் தோற்றத்தை ட்ரோல் செய்து ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்கள் இணையதளத்தில் குவிந்துள்ளது.

தற்போது இதனை எல்லாம் அடித்து நொறுக்கும்படி ஏகே 61 படத்திற்காக அஜித் ஏற்றுள்ள புதிய கெட் அப் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் காதில் கடுக்கன், தாடி, சால்டன் பேப்பர் ஹேர் ஸ்டைல் என புதிய லுக் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் அண்மையில் வெளியான இந்த படத்தின் டைட்டில் துணிவு மற்றும்  பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. துப்பாக்கியுடன் அஜித் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவலாக துணிவு படத்தில் சிபிச் சக்கரவர்த்தி, அமீர், பாவணி மூன்று பேரும் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.