சில ஆண்டுகளுக்கு முன் அவியல் எனும் திரைப்படத்தின் வாயிலாக இளம் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். அந்த படத்திற்கு பின் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்கள் இயக்கி வருகிறார். தற்போது லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். விஜய் மற்றும் லோகேஷ் 2-வது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் நடந்தது, பின் சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்ப்பதற்கு Game of Thrones வெப் தொடரில் வரும் கதாநாயகன் ஜான் ஸ்னோவ் போஸ்டர் லுக் போலவே உள்ளது என கூறி விமர்சித்து வருகின்றனர். அந்த போஸ்டர் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.