அச்சுறுத்தும் Omicron…. #INDvsSA கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு…. பிசிசிஐ அறிவிப்பு!!

ஓமைக்ரான் வகை கொரோனா காரணமாக இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையே கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த இந்திய அணி, அங்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வரும் 17ஆம் தேதி முதல் பங்கேற்க இருந்தது. இதற்காக வரும் 8ஆம் தேதியே இந்திய அணி மும்பையில் இருந்து தென் ஆப்பிரிக்கா செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது..

இதற்கிடையே தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஓமிக்ரான்  வைரஸ் உலகையே  மீண்டும் அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையே கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது..

முன்னதாக பல ஐரோப்பிய நாடுகள் தென் ஆப்பிரிக்கா உடன் விமான சேவையை நிறுத்தி உள்ளது.. தென் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கும் கடும் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.. தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நெதர்லாந்து அணி பாதியிலேயே தொடரை  நிறுத்திவிட்டு வீடு திரும்பியிருந்தது.. இந்த நிலையில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையே கிரிக்கெட் தொடர்ஒத்தி வைக்கப்படுகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *