பீகார் மாநிலத்தில் உள்ள பிர்போர் என்ற பகுதியில் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் திருடப்பட்டுள்ளது. அதாவது செல்போன் நிறுவன ஊழியர்கள் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து டவரை பழுது பார்ப்பது போன்று நடித்து செல்போன் டவரை முழுவதுமாக கழட்டி எடுத்து சென்றுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர்கள் செல்போன் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இங்கு aircel நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செல்போன் டவரை பழுது பார்ப்பது போன்று நான்கரை மணி நேரத்தில் டவரை முழுவதுமாக கழட்டி சென்றுள்ளனர்.
இந்த டவர் கடந்த 2006-ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வாடகை தராததால் வீட்டின் உரிமையாளர்கள் டவரை அகற்றுமாறு தொடர்ந்து கூறி வந்துள்ளனர். இதன் காரணமாக முதற்கட்ட பாகங்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் அகற்றிய நிலையில் மீதமுள்ள பாகங்களை மர்ம கும்பல் சிலர் நோட்டுமிட்டு திருடி சென்றுள்ளதாக தெரிய வருகிறது. திருடப்பட்ட செல்போன் டவரின் மதிப்பு 8 லட்சத்து 32 ஆயிரம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் இரண்டாவது முறையாக செல்போன் டவர் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.