அச்சச்சோ!!… அதிக விலைக்கு ஆரஞ்சு நிற பால் பாக்கெட் வாங்கும் அவலம்…. நிறைவேற்றப்படுமா இல்லத்தரசிகளின் கோரிக்கை….?

 பச்சை நிற பால்  பாக்கெட்களை விநியோகம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆவின் நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பால் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உற்பத்தி செய்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலையை 12 ரூபாயாக உயர்த்தியது. ஒரு லிட்டர் ₹60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆவின் அட்டை இல்லாதவர்களுக்கு இந்த விலை ஏற்றம் பொருந்தும். ஆனால் அட்டைதாரர்கள் முந்தைய விலையான லிட்டருக்கு 46 ரூபாய் கொடுத்து வாங்கலாம். ஆனால் தற்போது ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின்  அன்றாட விற்பனை 5  சதவீதம் குறைந்துள்ளது.

இதற்கு  குறைந்த விலையில் உள்ள  பச்சை நிற பால் பாக்கெட்டை வாங்குவது  காரணம். இதனால் ஆவின் பாலகங்களில் போதிய அளவில் பச்சை நிற பால் பாக்கெட் கிடைப்பதில்லை என மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இதனால்  வேறு வழி இல்லாமல்  மக்கள் அதிக விலையுடைய ஆரஞ்சு பால்பாக்கெட்டுகளை வாங்குகின்றனர். இந்நிலையில் பச்சை நிற  பால் பாக்கெட்டுகள் குறைவாக  கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறுகின்றனர். இது பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பில் ஏற்படும் நிதி பற்றாக்குறையை  சரி செய்வதற்காக விற்பனை செய்யப்படுவதாகவும்,நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையுடைய பச்சை நிற பால் பாக்கெட்டுகள்  கிடைப்பதை  நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்பதே மக்கள் பலரின் கோரிக்கையாக உள்ளது.