அசாம் மாநிலத்தில் இந்தமுறையும் இவங்கதானா…? இத்தனை தொகுதி வித்தியாசமா…? நிலவும் கடும் போட்டி…!!

அசாம் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இதில் பாஜக 52 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 27 இடங்களிலும், மற்ற கட்சிகள் மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும் .ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.

அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாஜக கட்சி 52 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 27 இடங்களிலும், மற்ற கட்சிகள் மூன்று இடத்திலும் முன்னிலை வகிக்கின்றது. கடந்த முறை தேர்தலில் பாஜக அசாம் மாநிலத்தில் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *