அசத்தும் அம்சங்களுடன்…”ஸ்மார்ட் ஸ்பீக்கர்” இந்தியாவில்..!

இந்திய சந்தையில்  ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . 

உலகின் முதன்மை நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தற்போது  இந்தியாவில் ஹோம்பாட்  என்கிற  ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹோம்பாட் ஸ்பீக்கருக்கு ஐ.ஒ.எஸ். மற்றும் ஐபேட் ஒ.எஸ். 13.3.1 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.  இந்தியாவுக்கான  புதிய அப்டேட்டில் ஆங்கில மொழி சிரி குரல்களில் இணைக்கப்பட்டுள்ளது.

2017 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் இந்த சாதனம்  அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானதும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா  மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 2018-ம் ஆண்டு முதல் விற்பனை துவங்கியது. இதன் விலை ஆரம்ப கால கட்டத்தில் 349 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 24,860) என நிர்ணயம் செய்யப்பட்டு சிறிது காலத்துக்கு பின் விலை குறைக்கப்பட்டு 299 டால்ர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 21,300) என நிர்ணயிக்கப்பட்டது.

புதிய ஹோம்பாட் 7 இன்ச் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது . இதனை  நாம்  குரல் வழியே இயக்ககூடிய  அம்சம் கொண்டது  மேலும் இதனால் இசை, செய்திகள் மற்றும் வீட்டில் உள்ள கனெக்ட்டெட் சாதனங்களையும்  இயக்க முடியும். ஹோம்பாட்  ஸ்பீக்கரில்   உள்ள சென்சார்கள்  வீட்டில் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு அறிந்து அதற்கேற்ப  ஆடியோ அளவுகளை மாற்றிக் கொள்ளும் திறன்  கொண்டுள்ளது.

இந்த புதிய ஹோம்பாட்டில்  மொத்தம் ஆறு மைக்ரோபோன்கள் உள்ளது . இது பரிந்துரைகளை கண்டறிந்து  இசை சார்ந்த தேடல்களில் பதில்களை வேகமாக அளிக்கிறது . ஹோம்பாட் மாடல் ஏ8 சிப் பொருத்தப்பட்டுள்ளது . இதில் பயனர்களின் உரையாடல்கள் அனைத்தும் சேகரித்து , அவை முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகின்றது.

மேலும் இதில்  ஆப்பிள் உருவாக்கிய ஊஃபர் வழங்கப்பட்டுள்ளது . இந்த ஊஃபர்   ஆடியோ தரத்தை உயர்த்தி  தெளிவான ஆடியோ அனுபவத்தை அளிக்கிறது . இந்தியாவில் ஆப்பிள் ஹோம்பாட் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை சர்வதேச சந்தையை ஒப்பிடும் போது சற்று குறைவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *