தமிழ்நாடு முழுவதும் 17 இடங்களில் வெயில் சதம் அடித்த நிலையில் மீனம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் முடிவுக்கு வந்த போதும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் உள்ளது. செஞ்சுரி அடிக்கும் வெயிலால் பகலில் மக்கள் வெளியே செல்ல கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் நேற்று 17 இடங்களில் சதம் அடித்துள்ளது.
அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 108.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதே போல சென்னை நுங்கம்பாக்கம், திருத்தணி, வேலூர், மதுரை, கடலூர், நாகை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 17 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன் ஹீட்டைத் தாண்டி பதிவாகியுள்ளது. ஆனால் காற்று கடுமையாக வீசுவதால் மக்கள் அத்தியாவசிய தேவை இன்றி பகலில் வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.