அக்டோபர் 20ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

இந்த வருடம் வடகிழக்கு பருவமழையானது இயல்பான அளவில் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் வடகிழக்கு பருவமழை காலங்களில் கடந்த வருடங்களை விட அதிக புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நடப்பாண்டு சென்னை உட்பட 17 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்திருக்கிறது.

அதன்படி வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, தேனி, கன்னியாகுமரி, கடலூர், காஞ்சிபுரம், மதுரை, சென்னை மற்றும் விருதுநகர் போன்ற 17 மாவட்டங்களில் சராசரியை விட கூடுதலான அளவு மழைப்பொழிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் திருப்பூர், திருப்பத்தூர், தூத்துக்குடி, சேலம், பெரம்பலூர், தென்காசி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், திருச்சி, நீலகிரி, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கோவை, அரியலூர் போன்ற மாவட்டங்களில் சராசரி மழைப்பொழிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என கூறப்பட்டுள்ளது.