அக்டோபரில் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும்…?

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஸ்புட்னிக்-வி, ஜான்சன் அண்ட் ஜான்சன், நோவோவாக்ஸ், இஞ்சாஸ்மல் உள்ளிட்ட தடுப்பூசிகளை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *