தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை, #அக்கா1825 என்ற பெயரின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். ஐந்து வருடங்களுக்கு 365 நாட்களும் பணியில் இருப்பேன் என்று உறுதி அளித்த அவர், அம்மா உணவகம் போல் ரயில் நிலையங்களில் மோடி உணவகம், தென் சென்னையில் ஒவ்வொரு பேரவை தொகுதிக்கும் ஒரு கலை அறிவியல் கல்லூரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.