தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைக்கிறது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதற்கு பலரும் விமர்சனத்தை தெரிவித்து வரும் நிலையில், கார்ல் மார்க்ஸ் குறித்து தேவையற்ற கருத்துகளை ஆளுநர் ரவி தெரிவிப்பதாக அமைச்சர் பொன்முடி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஆளுநர் ரவி ஒரு கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் போன்றே செயல்பட்டு வருகிறார். அக்கப்போர் செய்வதை விட்டுவிட்டு ஆளுநர் தனக்கான வேலையை எப்போது செய்யப் போகிறார்” என விமர்சித்துள்ளார். மேலும் ராணுவ வீரர் மரணத்தை பாஜக வியாபார பொருளாக்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.