உ.பி.,யில் அகிலேஷ் யாதவின் போஸ்டர் மீது சிறுநீர் அபிஷேகம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். வாரணாசியைச் சேர்ந்த படே லால் சௌஹான் என்பவர் போஸ்டர் மீது சிறுநீர் கழித்தப்படி, அவதூறாக பேசி, அதனை தனது பேஸ்புக் நேரலையிலும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, சமாஜ்வாதி கட்சியின் புகாரின் பேரில், சௌஹானை சோலாப்பூர் போலீசார் கைது செய்தனர்.