ஃபைல்களுடன் திடீரென டெல்லிக்கு பறந்த ஆளுநர்…. செம அப்செடில் பாஜக…. அப்படி என்ன நடந்தது…..?

நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபோது திருமாவளவன் உள்ளே புகுந்து குட்டையை குழப்பியதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினை தடை செய்ய வேண்டும் என்றும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பாஜக மாநில செயலாளர் வினோத் பி செல்வம் தனது twitter பதிவில், “சட்டப்பிரிவு 356 ஐ பயன்படுத்தி சட்ட ஒழுங்கு இல்லாத மாநில அரசை கலைத்தால் என்ன? என்று கேட்டு மேலும் சூட்டை கிளப்பி உள்ளார். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சீக்ரெட் ஃபைல்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் ஆளுநர் ஆர்.என் ரவியின் டெல்லி பயணமானது தமிழக அரசுக்கு எதிராகவோ அல்லது திருமாவளவன் குறித்தோ இல்லாமல் பாஜகவினர் தொடர்பாகவே என்பதுதான் வந்துள்ள முதல் தகவலாக இருக்கிறது. அதாவது தமிழக பாஜகவில் உருவாகி இருக்கும் கோஷ்டிகளால் சமீபத்தில் ஜேபி.நாட்டா வருகையின்போது நடந்த குளறுபடிகள் மற்றும் தமிழக பாஜகவில் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய மாற்றம் குறித்து விரிவான அறிக்கை அளிக்கவை இந்த டெல்லி பயணம் என்று பரவலாக கூறப்படுகிறது. தமிழக ஆளுநர் அரசாங்க பணி நிமித்தமாக டெல்லி சென்றிருக்கலாம் என்று முதலில் கருதிய தமிழக பாஜக தலைமை தற்போது ஆளுநரை அறிக்கை குறித்து அறிந்து கடும் அப்செட்டில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்த போது, சமீப காலமாக பாஜக நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருவதை செய்திகள் மூலம் காண முடிகிறது. இருப்பினும் அதை மாற்றும் வகையிலும் மக்களிடையே நற்பெயர் பெற்று வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று உழைக்கிறோம். ஆனாலும் சர்ச்சைகள் ஏதாவது ஒரு வகையில் வந்து கட்சிக்கு அவர் பெயர் ஏற்படுத்தி வருகிறது என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.