ஃபிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

இந்தியாவின் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வட்டி விகிதங்கள் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு அனைத்து கால வரம்புகளுக்கும் வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கி நேற்று ரெப்போ வட்டி விகிதத்தை 5.90 சதவீதமாக உயர்த்திய நிலையில் ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்தியுள்ளது.பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசங்களுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வட்டி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

புதிய வட்டி:

7 – 29 நாட்கள் : 3%

30 – 90 நாட்கள் : 3.50%

91 – 184 நாட்கள் : 4.25%

185 – 364 நாட்கள் : 4.90%

1 ஆண்டு – 389 நாட்கள் : 5.70%

390 நாட்கள் – 2 ஆண்டுகள் : 5.70%

2 ஆண்டு – 3 ஆண்டு : 5.80%

3 ஆண்டு – 5 ஆண்டு : 6.10%

5 ஆண்டு – 10 ஆண்டு : 6%

5 ஆண்டு (80C FD) : 6.10%